Supreme Court refuses to stay order of High Court: எடப்பாடி பழனிசாமியிடம் சாவி.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி: Supreme Court refuses to stay order of High Court: எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதன் பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவில் இரட்டைத் தலைமை மாதிரி முடிவுக்கு வந்தது, கட்சிக் கூட்டத்தின் போது கட்சி விரோதச் செயல்களுக்காக ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கட்சியின் தலைமை அலுவலகம் ஆர்டிஓவால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து வருவாய்த் துறை உத்தரவை எதிர்த்து இரு தலைவர்களும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அக்கட்சியின் தலைமையகத்தை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் விசாரிக்கபட்டது.

அதிமுக பொதுக்குழு குறித்து ஜூன் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியானதால், தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், கடந்த 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது எனவும், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் கூறியது 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் வழங்கியுள்ளதாகவும் வாதிட்டது.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், கடந்த ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், பதவிகள் காலாவதியாகிவிடும் என எந்த தீர்மானத்திலும் இல்லை என வாதிட்டது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தேதிக் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி ஜெயந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதி ஜெயந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 22ம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இதனிடையே தங்களது வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன் நடைபெற்றது.

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, முன்னாள் முதல்வர் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக இருப்பதாக வாதிட்டார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவில், ஓபிஎஸ்க்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது மற்றும் புதிய பொதுக்குழு கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டது குறித்து குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் நீக்கம் மற்றும் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.