Vietnam-India Bilateral Army Exercise Concludes: வியட்நாம் – இந்தியா இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி நிறைவு

சந்திமந்திர்: Vietnam-India Bilateral Army Exercise Vinbax 2022 Concludes at Chandimandir: ஹரியானாவின் சந்திமந்திரில் நடைபெற்ற வியட்நாம் – இந்தியா இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி நிறைவடைந்தது.

வியட்நாம் – இந்தியா இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி (வின்பேக்ஸ்) கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஹரியானாவின் சந்திமந்திரில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில், பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஐநா அமைதி குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது. வியட்நாமின் ராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் ராணுவ பயிற்சி இதுவாகும். இரு நாட்டு வீரர்களுக்கும் கருத்தியல் மற்றும் செய்முறை வகுப்புகள் கற்பிக்கப்பட்டன.

இன்று நடைபெற்ற பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் திரு பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நாவ் குமார் காந்துரி உள்பட பல அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியட்நாமில் 2023 ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் நிலச்சரிவில் பலியான ஆயுதப்படை பெண் வீரர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி:
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியான பெண் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெங்டுபி ராணுவ மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், மணிப்பூரில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 61 பெண் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் வழங்கினார்.

நிகழ்வில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர், வீரர்களின் தியாகத்திற்கு நாடு எப்போதும் கடன் பட்டுள்ளது என்றும், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்திற்கு நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்தித்தர அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், நாட்டின் சமூக, பொருளாதார தேவைகளில் முக்கிய பங்கு வகிக்க உள்ள ஜிரிபம் – துபுல் – இம்பால் ரயில் பாதை திட்டத்தில் ஆயுதப்படை வீரர்களின் பங்கு அளப்பரியது என பாராட்டினார். அப்பொது, ஆயுதப்படைகளில் இளைஞர்கள் இணைவதற்கு பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ராணுவம் எடுத்து வரும் முன்முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.