Bath naked in public : ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக‌ மனைவியை பொது இடத்தில் நிர்வாணமாக்கி குளிக்க வைத்த கணவர்

Man forces wife : மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மலேஷ்வர் நீர்வீழ்ச்சியின் கீழ் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியை நிர்வாணமாகக் குளிக்க வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா: Bath naked in public : 38 வயது தொழிலதிபர், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தனது மனைவியை மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மலேஷ்வர் நீர்வீழ்ச்சியின் கீழ் நிர்வாணமாக குளிக்க வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என யாரோ மந்திரவாதி கூறியதை நம்பி தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியை நிர்வாணமாக அருவியில் குளிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

கணவரின் சண்டையை பொறுக்க முடியாத மனைவி இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார் (Complaint to the police). இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாரதி வித்யாபீடம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கணவர், அவரது தந்தை, மந்திரவாதி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாரதி வித்யாபீடம் காவல் நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டும் (Husband’s family asked for dowry), ஆண் குழந்தைக்காகவும் துன்புறுத்துவதாக அந்தப் பெண் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் புகாரின்படி, அவரது கணவர் மற்றும் பெற்றோர்கள், அந்த பெண்ணை கோலாப்பூரு அருகே உள்ள‌ ஜெய்சிங்பூரில் சுயமாக தன்னை கடவுள் என்று அறிவித்து கொண்டுள்ள மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணை பல்வேறு மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யச் சொன்னார். மேலும் அவரது வழிகாட்டுதலின்படி, ஷிரோலின் சுர்வாட் கிராமம் மற்றும் இந்தபுரா வட்டம் அலுவலகங்களில் வழிபாடு செய்யப்பட்டது. இத்தனைக்கும் பிறகு பொது வெளியில் நீர் வீழ்ச்சிக்கு அடியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தினார்கள் (Forced to bathe naked under the water fall in public). இதை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று மந்திரவாதி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி கணவர் தனது சொத்தை அடமானம் வைத்து (Mortgage the property) ரூ.75 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மேலும் த‌னது நகைகளையும் பறித்துச் சென்றதாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

498ஏ, 323, 420, 504, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் (Police have registered a case). இதனுடன், மகாராஷ்டிரா மாநிலத்தின் தீய மற்றும் அகோரி சடங்குகள் மற்றும் பிளாக் மேஜிக் சட்டங்களின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.