POLICE COMPLAINT ON WOMAN : கணவர் வீட்டில் ரூ. 10 லட்சம் திருடிய மனைவி சொந்த ஊருக்கு தப்பி ஓட்டம்

BENGALURU : மகனின் முதல் நிச்சயதார்த்தம் முறிந்ததையடுத்து, கமலா தனது மகனுக்காக கௌதமி என்ற இளம் பெண்ணை தேடினார்.

பெங்களூரு: POLICE COMPLAINT ON WOMAN : திருமணம் என்பது அழகான உறவு, கொஞ்சம் கசப்பாக மாறினாலும், இந்த உறவு குடும்பத்தையே சீரழித்து விடும். பெங்களூரு பத்மநாபநகரில் இதற்கு சாக்ஷியாக‌ ஒரு சம்பவம் நடந்துள்ளது. மருமகள் எங்கள் குடும்பத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டதாக பனசங்கரி காவல் நிலையத்தில் கமலா என்பவர் புகார் அளித்துள்ளார்.

கமலா தனது மகனுக்காக கௌதமி என்ற இளம் பெண்ணை பார்த்து , நிச்சயதார்த்திற்கு பிறகு, திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் மணப் பெண்ணுக்கு கொடுத்ததோடு, தங்க ஆபரணங்களையும் கொடுத்துள்ளார். ஆனால் திருமணம் ஆன நாளில் இருந்தே கௌதமி தனது இன்னொரு கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். கணவருடன் அமெரிக்கா செல்ல இருந்த கௌதமி, கணவன் வீட்டில் பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து செய்து வந்ததாக (constantly doing various problems at home) கூறப்படுகிறது.

கௌதமியை கணவருடன் அமெரிக்கா அனுப்ப, அவரது கணவர் குடும்பத்தினர் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விசா தயார் செய்தனர். விமான டிக்கெட்டுக்கும் பணம் கொடுத்தார். ஆனால் இதற்கிடையில் கௌதமி உடல்நலக்குறைவு காரணம் காட்டி சொந்த ஊருக்கு சென்றுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளுடன் (10 lakh rupees in cash and 18 lakh rupees worth of gold jewelery in the house) மருமகள் திருடிக் கொண்டு தப்பிச் சென்றது கமலாவின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.

கௌதமி வீட்டுக்கு சென்ற கமலா குடும்பத்தினர், பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் கௌதமியின் பெற்றோர் கமலாவை குடும்பத்தினரை சகட்டுமேனிக்கு திட்டி, அவமானப்படுத்தி, திருப்பி அனுப்பி உள்ள‌னர். மருமகளின் சண்டையால் சோர்வடைந்த கமலா, தற்போது நீதிக்காக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் (She went to the police station and lodged a complaint).