Gowri langesh : கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: துப்பாக்கி விற்றதாக வியாபாரி ஒப்புதல்

பெங்களூரு : Gowri langesh marder case : கௌரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையில் குற்றவாளிகளின் கூட்டாளிக்கு துப்பாக்கி விற்றதாக வியாபாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு படை விசாரணை செய்து, அண்மையில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரித்து வரும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் மைசூரில் துப்பாக்கிக் கடை நடத்தி வரும் சையது ஷபிரின் சாட்சி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

வாக்குமூலத்தில் மத்தூரைச் சேர்ந்த ஹிந்து யுவன்சேனையின் தலைவராக செயல்பட்டு வந்த கே.டி. நவீன்குமார் என்பவ‌ருக்கு துப்பாக்கியை விற்பனை செய்வதாக அவர் உறுதி செய்தார். இவர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கூட்டாளி என தெரியவந்துள்ளது. சையது ஷபிரிடம் வாங்கிய‌ துப்பாக்கியின் உதவியுடன் கௌரி லங்கேஷை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் நவீன்குமார் தெரிவித்தார்.

நவீன்குமாருக்கு கௌரி லங்கேஷ் கொலை வழக்கு மட்டுமின்றி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் உள்ளிட்டோரின் கொலை வழக்குகளிலும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. குற்றப்பத்திரிகையில் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் காரணமெனக் கூறப்படும் 18 பேரும், கௌரி லங்கேஷ் ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவராக கருதி கொலைக்கான சதித் திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதன சன்ஸ்தா அமைப்போடு தொடர்புள்ள ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஈடுபட்டு வந்த அமோல் காலே கொலைக்கான சதி திட்டம் தீட்டியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கௌரி லங்கேஷ் கொலைக்கும் ஹிந்து அமைப்புகளுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என வாதிட்டனர். கௌரி லங்கேஷ் மீது நக்சல்கள்தான் கோபமாக இருந்ததாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.