Clash at Temple Festival: கோயில் திருவிழாவில் மோதல்; பெண் போலீஸ் உள்ளிட்ட 6 பேர் காயம்

மதுரை: Conflict at Temple Festival; Six people, including a policewoman, were injured: உசிலம்பட்டி அடுத்த வாலாந்தூர் கிராம கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் போலீஸ் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த வாலாந்தூர் கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலின் (Angala eshwari Temple) குடமுழுக்கு விழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இன்று 48வது நாள் பூஜை நடைபெற்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் பால்குடம், முறைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, (Clash between two parties) மோதலாக வெடித்தது. அப்போது அவர்கள் கம்புகளைக்கொண்டு தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் (Woman Police) மேனகா காயமடைந்தார். மேலும் வாலாந்தூரை சேர்ந்த மலர்விழி, பாண்டி, சங்கிலி, பாண்டி, வீர ராகவன், கல்யாணி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து 6 பேரையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்வத்தால் உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீசார் (Police Protection) குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.