Treacherous war : ஓ.பன்னீர் செல்வம் துரோக யுத்தம் நடத்துகிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார

தேனி : Panneer Selvam is waging a treacherous war : முன்பு தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார் என்று தேனியில் அதிமுக சார்பில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்தார்.

தேனி, பங்களாமேடு திடலில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு (Demonstration organized by AIADMK) தலைமை வகித்து அவர் பேசியது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் என பள்ளிகளில் அடுத்து நடந்து வரும் சம்ப‌வங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

நீர் தேர்வு ரத்து என்பது மக்களை ஏமாற்றும் வேலை. அதிமுக ஆட்சியின் போது மின் கட்டண உயர்வை எதிர்ப்பதாக கூறியவர்கள், தற்போது மின் கட்டணத்தை (electricity bill) பல மடங்கு உயர்த்தியுள்ளனர். குடும்பத் தலைவிக்கு மாத ஊக்கத் தொகை வழங்குவதாக கூறியவர்கள், தற்போது முதியோர் ஓய்வூதியத்தை ரத்து செய்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நடத்தியது தர்ம யுத்தம் (Dharma Yuddha) . இப்போது நடத்துவது துரோக யுத்தம். அவருடன் தர்ம யுத்தத்தில் பங்கேற்றவர்கள் தான், தற்போது அவரது உண்மை முகத்தை அடையாளம் காட்டி வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தின் பல விதமான சிரிப்புகளுக்கு தற்போது தான் அர்த்தம் புரிந்துள்ளது.

அதிமுக வில் உள்ள ஒரே எம்.பியை கட்சியை விட்டு நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ப.ரவீந்திரநாத் (Ravindranath) தனது எம்.பி பதவியை ராஜினமா செய்து விட்டு, இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்து விட்டால், நான் பொது வாழ்கையை விட்டு விலகி விடுகிறேன். அதிமுகவின் உண்மைத் தொண்டர்களின் உழைப்பாலும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கினாலும் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை (MK Stalin) சந்தித்து, உங்களது ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று அவர் பாராட்டு தெரிவிக்கிறார். அப்படியென்றால், அதிமுக வை கலைத்து விடலாமா. இந்தக் கட்சி எதற்காக தோன்றியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா. திமுக என்ற தீய சக்தியை ஒழிப்பதற்காகத் தான் இந்த மக்கள் இயக்கம் உருவானது என்பதை மறந்து விட்டீர்களா. அதிமுக வை அழித்துவிட துடிக்கும் திமுக அரசுடன் நட்புறவு பாராட்டுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது கொங்கு மண்டலத்தில் அதிமுக 100 சதம் (AIADMK 100 percent) வெற்றி பெற்றது. ஆனால், பாண்டி மண்டலத்தில் அந்த வெற்றி கிடைக்கவில்லை. எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்யவில்லை. அவரது சொந்தத் தொகுதியைத் தவிர அவர் வேறு எங்கும் சென்று தேர்தல் பணியாற்றவில்லை. ஆனால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் தனக்கு வேண்டும் என்கிறார்.

அதிமுக விலிருந்து நீக்கப்படுபவர்கள் என அடுத்தடுத்த கட்டங்களாக பட்டியல் (List in successive stages) வெளியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம் இப்படியே போனால் அதிமுக வின் 1.99 கோடி தொண்டர்களையும் நீக்கி விட்டு, அவரும், அவருடன் இருக்கும் 4 பேர் மட்டும் தான் கட்சியில் இருப்பதாக அறிவிப்பு வெளியிடும் நிலை ஏற்படும். அதிமுக வை அழித்து விடலாம் என்று யாராவது கனவு கண்டால், அது வெறும் பகல் கனவாக மட்டுமே இருக்கும் என்றார்.