Rahul Gandhi arrest :தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது

Image Credit : Twitter.

தில்லி: Rahul Gandhi arrested after protest in Delhi : தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான‌ ராகுல்காந்தியை போலீஸார் கைது செய்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத் துறை (Enforcement Department) அலுவலகத்திற்கு ஏற்கெனவே ஆஜரானார். அவர் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஆஜரானார்.

இதனைக் கண்டித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியினர் (Congress members) போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரை விஜய் சதுக்கத்தின் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அங்கு போலீஸாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து ராகுல்காந்தி தரையில் அமர்ந்து தர்னா (Dharna sitting on the ground) போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் ராகுல்காந்தியை கைது செய்தனர். ராகுல்காந்தி கைது செய்யப்பட்டத்தையடுத்து தில்லியில் பதட்டம் நிலவி வருகிறது.

மத்திய அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் (Central government Abusing power) செய்கிறது. எதிர்க்கட்சிகளை குறி வைத்து புலனாய்வு அமைப்புகளை ஏவி விடுகிறது என குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் தில்லியில் மட்டுமல்லாது தேசிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.