Panneer Selvam’s letter : ஓ.பன்னீர் செல்வத்தின் கடிதத்தை மக்களவைத் தலைவர் ஏற்பு

சென்னை: Lok Sabha Speaker accepted O.Panneer Selvam’s letter: மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தை அதிமுக கட்சியை சேர்ந்தவர் என்று சொல்ல வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கடிதத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அவரது ஆதரவாளர்களால் தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palaniswami) அதிமுகவில் இருக்கும் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தை அதிமுக கட்சியைச் சேர்ந்தவர் என்று கருதக்கூடாது என்று மக்களவைத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் இந்த கடிதத்தை மக்களவைத் தலைவர் புறக்கணித்திருக்கிறார் என்றும் அதிமுக உறுப்பினர் என்று சொல்ல வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை மக்களவைத் தலைவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்திருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் .

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ஆன ரவீந்திரநாத் (Rabindranath) கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதனால் அவரை அதிமுக உறுப்பினர் என்று சொல்லக்கூடாது என்றும் மக்களவைத் தலைவருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.ப‌ன்னீர்செல்வம் எழுதிய கடிதம் ஏற்கப்பட்டிருக்கிறது. அதிமுக உறுப்பினராக (member of AIADMK) ரவீந்திரநாத் தொடருவார் என்று அறிவிப்பு வந்திருக்கிறது என்றார்.

அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் (Vaithilingam) வெளியிடும் பட்டியலே இனி கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாகும். மற்றவர்கள் அறிவிப்பு அதிமுகவை கட்டுப்படுத்தாது என்றார்.

எடப்பாடிக்குத்தான் அதிமுகவின் அதிகாரம் இருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வரும் நிலையில், மக்களவைத் தலைவரின் (Lok Sabha Speaker) இந்த அறிவிப்பால் ஓ.ப‌ன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.