Praveen Nettaru murder : பாஜக பிரமுகர் பிரவீண் நெட்டாரு கொலை : முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம்

கர்நாடகம் மாநிலம் தென் கன்னட மாவட்டம் பெல்லாரே பேட்டையில் பாஜக பிரமுகர் பிரவீண் நெட்டாரு நின்று கொண்டிருந்தபோது, ​​கேரள பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

மங்களூரு: BJP party youth leader Praveen Nettaru murdered : தென் கன்னட மாவட்டத்தில் உள்ள அமைதியான கடற்கரைபகுதி தற்போது கொந்தளிப்பாக‌ மாறியுள்ளது. பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீண் நெட்டாரு தென் கன்னட மாவட்டத்தின் சுள்யா வட்டத்தின் பெல்லாரே பேட்டையில் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால், கடலோர மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இரவு, பெல்லாரே பேட்டையில் பிரவீன் நெட்டாரு (Praveen Nettaru) நின்று கொண்டிருந்தபோது, ​​கேரளா பதிவெண் கொண்ட பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். உடனடியாக புத்தூர் மருத்துவமனையில் பிரவீன் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரவீன் நெட்டாரு பாஜகவின் இளைஞரணித் தலைவராக (BJP’s youth leader)இருந்தவர், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தப்போது, அவர் மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். பாஜத கட்சி பிரமுகரான‌ பிரவீனுக்கு இந்த பகுதியில் செல்வாக்கு அதிகம். கோழிக்கடை நடத்தி வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற மற்றொரு கொலைச் சம்பவம் தொடர்பாக‌ இந்தக் கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பாஜக‌ இளைஞரணி தலைவர் படுகொலை சம்பவத்தால், கடற்கரை சாம்பலால் மூடப்பட்ட குழி போல் உள்ளது. இளம் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து, பாஜகவினர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு (heavy security) ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பிரவீனின் ஆன்மா சாந்தியடையட்டும் என முதல்வர் பசவராஜ் பொம்மை

கடலோர பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரு கொலைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். பிரவீன் நெட்டாரை காட்டுமிராண்டித்தனமான படுகொலை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் (will be punished under the law) தண்டிக்கப்படுவார்கள். பிரவீனின் ஆன்மா அமைதியுடன் இளைப்பாறட்டும், இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும் என்று சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளார்.