UCSL Recruitment: உடுப்பி கொச்சி ஷிப்யார்ட் லிமிடெடில் ரூ.49,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

கொச்சின்: UCSL Recruitment: உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெடில் (Udupi Cochin Shipyard Limited) மேற்பார்வையாளர், உதவி மேலாளர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பராமரிப்பு வசதி (maritime-related facilities) கொண்டதாகும் . கேரள மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான கொச்சியில் உள்ள கடல்சார் தொடர்பான வசதிகளின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்நிறுவனம் கப்பல் கட்டும் பணி, விநியோகம் மற்றும் இரட்டை உமி எண்ணெய் டேங்கர்கள் ( building platform supply vessels and double-hulled oil tankers) ஆகிய சேவைகளை செய்து வருகிறது. தற்போது அது இந்திய கடற்படைக்கான முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் உருவாக்கி வருகிறது.

கொச்சின் ஷிப்யார்ட் 1972 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க நிறுவனமாக இணைக்கப்பட்டது. முதல் கட்ட வசதிகள் 1982ம் ஆண்டு முதல் தொடங்கின. இந்நிறுவனம் மினிரத்னா (Miniratna) அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இங்கு 1.1 லட்சம் டன்கள் வரையிலான கப்பல்களை உருவாக்குவதற்கும், 1.25 லட்சம் டன்கள் வரையிலான கப்பல்களை பழுதுபார்ப்பதற்கும் வசதிகள் உள்ளன. மேலும் கடல் பொறியியலில் பட்டதாரி பொறியாளர்களுக்கும் பயிற்சி (Marine Engineering) அளித்து வருகிறது . ஒவ்வொரு ஆண்டும் சுமார் நூறு மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இந்த நிறுவனத்தின் கீழ் உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், மும்பை கப்பல் பழுதுபார்க்கும் பிரிவு, கொல்கத்தா கப்பல் பழுதுபார்க்கும் பிரிவு, அந்தமான் நிக்கோபார் கப்பல் பழுதுபார்க்கும் பிரிவு, ஹூக்லி கொச்சின் கப்பல்துறை லிமிடெட் (UDUPI COCHIN SHIPYARD LIMITED, MUMBAI SHIP REPAIR UNIT, KOLKATA SHIP REPAIR UNIT, ANDAMAN NICOBAR SHIP REPAIR UNIT, HOOGLY COCHIN SHIPYARD LIMITED) இயங்கி வருகிறது.

இந்நிலையில், உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (UDUPI COCHIN SHIPYARD LIMITED) மேற்பார்வையாளர், உதவி மேலாளர் மற்றும் வரைவாளர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்பார்வையாளர், உதவி மேலாளர் மற்றும் வரைவாளர் (RECRUITMENT OF ASSISTANT MANAGERS, SUPERVISORS AND DRAFTSMANS ON CONTRACT BASIS) ஆகிய 22 பணியிடங்களுக்கு நேர்காணலின் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் விரும்பிய பதவிக்கான விண்ணப்பதாரர் இறுதி செய்யப்படுவார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ரூ. 49,500 வரையிலான சம்பளத்துடன் பணியமர்த்தப்படுவார். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் 10.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

28.07. 2022 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களுக்கான வயது தளர்வு இந்திய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி இருக்கும், உண்மையான வயதிலிருந்து ராணுவப் பணியின் காலத்தைக் கழித்து, அதனுடன் மூன்று ஆண்டுகள் சேர்த்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.

விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ/முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட) ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10.08.2022 ஆகும்.

விண்ணப்படிவம் மற்றும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://cochinshipyard.in என்ற முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.