Accident: சிக்கமகளூர் ஒரே நாளில் வெவ்வேறு இரண்டு இடங்களில் சாலை விபத்து ஒருவர் சாவு

Accident: One person dies in two road accidents in Chikkamagaluru on the same day
Image credit to News Next Tamil

Accident: சிக்கமகளூர் மாவட்டம் கொப்பா தாலுகா இரெகெரெ என்னும் கிராமம் அருகே சிருங்கேரியில் இருந்து தரிகெரே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றும் தரிக்கெரையிலிருந்து சிருங்கேரி சென்று கொண்டிருந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது இது குறித்த கொப்பா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அதேபோல மற்றொரு சம்பவம் சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுக்கா கடூர் சிமோகா தேசிய நெடுஞ்சாலையில் கடூர் டவன் பகுதியை சேர்ந்த உசேன் 21 வயது என்பவர் நடந்து சென்ற பொழுது அரசு பேருந்து ஒன்று மோதி பலத்த அடிபட்டு தூக்கி வீசப்பட்டு அவர் இறந்து விட்டார் அவரது உடலை மீட்டு கடூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்