Heavy Rainfall: சிக்கமகளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது நேற்றைய முன் தினம் பாபாபுடன் கிரி செல்லும் இடைப்பட்ட பகுதியில் கவிகல்கண்டி என்னும் இடத்தில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது

இன்று அதிகாலை 2 மணிக்கு சிருங்கேரி தாலுகா நெம்மூர் என்னும் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது இதை அடுத்து அங்கு வாகனங்கள் நின்றிருந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் மற்றும் ஜேசிபி மூலம் காலை 8 மணி வரை அதை சரி செய்து சாலையில் இருந்த மண்ணை அகற்றி போக்குவரத்துக்கு வழி வகுத்துக் கொடுத்தனர்

அதற்கு முன்னதாக ஆகும்பே வழியாக வாகனங்கள் அகும்பே வழியாக சென்றன மாவட்டத்தில் நிரந்தரமாக மழை பெய்து வருவதால் தூங்கா பத்ரா ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது நிரந்தரமாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது இரண்டு நாட்களாக அங்கனவாடி பள்ளிகளுக்கு விடுப்பு விட்ட நிலையில் இன்று நிரந்தரமாக மழை பெய்து வருகிறது அதேபோல பாபாபுடன்கிரி பகுதியில் கார் ஒன்றும் மழைக்கு கார் பல்டி ஆனது



