Narendra Modi: உடுப்பி சிக்கமகளூர் பாராளுமன்ற உறுப்பினர் கோட்டா ஸ்ரீநிவாஸ் இரண்டு நாட்கள் பயணமாக சிக்கமகளூருக்கு வந்தார் அவர் நேற்று மாலை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்டத்திற்குரிய திசா சபை என்னும் சபை கூட்டத்தை நடத்தினார் அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்
மாவட்டத்தில் 18 கோடியே 40 லட்ச ரூபாய் வரையான விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 1504 பேருக்கு ஒரு லட்ச ரூபாய் விதம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் 619 பேருக்கு சுய தொழிலுக்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் மாவட்டத்தில் ஜலஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிளும மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு வேலைப்பாடுகள் நடந்து முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிசான்சம்மன் திட்டம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் கோவில் புனரமைப்பு திட்டம் ரயில்வே துறை இது போன்று பதினோரு ஆண்டுகளில் மாநிலத்திற்கு மோடியின் ஆட்சியில் நன்றாக அனைத்து நலத்திட்டங்களும் செயல்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை தெரியாதவர்கள் வேண்டுமானால் குறை கூறுவார்கள்

அதை தவிர தெரிந்தவர்கள் யாரும் குறை சொல்ல மாட்டார்கள் இது போன்ற பல நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில் மேலும் மாவட்டத்திற்கு என்ன அத்தியாவசிய தேவை வேலைப்பாடுகள் இருந்தாலும் மத்திய அரசுக்கு உட்பட்டவைகளை செய்து கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார் அவருடன் மாவட்ட தலைவர் தேவராஜ் மற்றும் பலர் இருந்தனர்



