2 people arrested in murder case : பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆக. 11வரை நீதிமன்றக் காவல்

Accused remanded in judicial custody : வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளை ஆகஸ்ட் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென் கன்னடம்: Praveen Nettaru’s murder case : மாநிலத்தில் இந்து ஆர்வலர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய இந்து ஆர்வலர் பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று, முகமது ஷபீக் மற்றும் ஜாகிர் ஆகியோரை கைது செய்து தென் கன்னடம் மாவட்டம் புத்தூர் ஏசிஜேஎம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டவர்களை ஆகஸ்ட் 11ம் தேதி வரை (Till 11th August) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

பிரவீண் நெட்டாரு கொலை வழக்கிற்கு பிறகு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த தென் கன்னட மாவட்ட காவல் துறையினர், 5 தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோண‌ங்களில் விசாரணை நடத்தி வந்தனர். எஸ்டிபிஐ அமைப்பினர் உட்பட மொத்தம் 27 பேரை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முகமது ஷபீக் மற்றும் ஜாகிர் (Muhammad Shafiq and Zakir) ஆகிய இருவர் மீது சந்தேகம் வலுத்ததையடுத்து வியாழக்கிழமை காலை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது ஷபீக்கின் தந்தை இப்ராகிம், இவர் கொல்லப்பட்ட பிரவீண் நெட்டாருவின் கோழிக்கடையில் மூன்று மாதங்கள் வேலை செய்ததாகக் கூறப்படுகிறது. டெலிகிராமில் வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பில் இருந்த ஷபிக், பிரவீண் நெட்டாருவைக் கொலை செய்ய‌ மாஸ்டர் பிளான் ( master plan) வகுத்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளியான ஜாகீர் கொலை செய்யப்பட்ட நாளில், பிரவீண் நெட்டாருவின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரவீண் கொல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே கோழிக்கடையைச் சுற்றித் திரிந்த‌ ஜாகீர், கொலையாளிகளுக்கு பிரவீணின் நடமாட்டம் குறித்த தகவல்களைத் தெரிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஜாகிரின் நடமாட்டம் அங்கிருந்த சிசி கேமராவில் (CC camera)பதிவாகியுள்ளது.

துபாயில் உள்ளவர்களிடம் டெலிகிராம் மூலம் ஷபீக் பேசி பிரவீண் நடமாட்டம் குறித்து தகவல் கொடுத்திருக்கலாம்.இதனால் பிரவீண் நெட்டாரு கொலைக்கு வெளிநாட்டில் ஸ்கெட்ச் போடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஷபீக்கின் தந்தை இப்ராகிம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், மேலும் எங்கள் மகன் ஷபிக் எந்த கொலையும் செய்யவில்லை. பிரவீண் கொலை செய்யப்பட்ட போது அவர் வீட்டில் இருந்தார். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது (We have the proof) என தெரிவித்துள்ளார்.

போலீஸ் காவலில் உள்ள ஜாகீர், பிரவீண் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரின் கோழிக்கடை முன் நடந்து செல்வது சிசி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, பிரவீணைக் கொல்ல வந்த குற்றவாளிகளுக்கு அவரின் நடமாட்டம் குறித்து ஜாகீர் தகவல் அளித்திருக்கலாம் (Zakir may have provided the information) என சந்தேகம் எழுந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஜாகிர் மற்றும் ஷபீக் இருவரும் பிரவீண் கொலையில் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்ல. ஆனாலும், இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. கேரள நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட பைக்கில் குற்றவாளிகள் வந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் மங்களூரு போலீஸார் (Mangalore Police) கேரளாவுக்கும் சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வலை விரித்துள்ள‌னர்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் பிரவீண் நெட்டாரு கோழிக்கடையை மூடிவிட்டு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தப் போது, ​​மோட்டார் சைக்கிளில் (On a motorcycle) வந்த மர்மநபர்கள் வீச்சரிவாளால் வெட்டி பிரவீனை நெட்டாருவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற‌னர்

முன்னதாக பிரவீண் நெட்டாரு கொலை வழக்கு தொடர்பான‌ விசாரணைகள் குறித்து உள்துறை அமைச்சர் (Home Minister) அரக ஞானேந்திராதெரிவித்ததுடன், சந்தேகத்தின் பேரில் 15க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் பேசிய அவர், கேரள எல்லையில் பிரவீன் நெட்டாருவின் குடியிருப்பு உள்ளது.

எனவே கேரளாவைச் சேர்ந்த சிலர் இந்தச் செயலைச் செய்துவிட்டு, மீண்டும் கேரளாவுக்குச் சென்று தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறோம். எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய‌ கேரள காவல்துறையின் (Kerala Police) ஒத்துழைப்பும் தேவை உள்ளது. இந்த வழக்கில், அம்மாநில காவல் துறை சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

மேலும் மங்களூரில் இந்து ஆர்வலர்களின் கோபம் குறித்து பேசிய அவர், இந்து அமைப்புகளுக்கு பிரவீன் மதிப்புமிக்க சொத்து என்றும் கூறினார். அதனால் ஆர்வலர்கள் கோபமடைந்துள்ள‌து இயல்பு. மங்களூரு மக்கள் அமைதியை விரும்புபவர்கள் (Mangaloreans are peace loving people) மற்றும் புத்திசாலிகள். ஆனால்,அவர்களில் ஒருவரை இழந்துள்ளதால், வருத்தமும் கோபமும் வருவது சகஜம்தான் என்றார்.