Partha Chatterjee : மம்தா பானர்ஜி அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கம்

Image Credit : Twitter.

கொல்கத்தா : Partha Chatterjee removed from cabinet :மேற்கு வங்க மாநில அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (Trinamul Congress) அரசில் தொழில்துறை அமைச்சராக உள்ள பார்த்தா சட்டர்ஜி, முன்பு கல்வி அமைச்சராக இருந்தப்போது ஆசிரியர் நியமன தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த ஜூலை 23 இல் அவரை கைது செய்தனர்.

தற்போது அமலாக்கத்துறை காவலில் (Enforcement Directorate in custody) உள்ள பார்த்தா சட்டர்ஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக‌ நீக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறி இருந்தார்.

இதனையடுத்து பார்த்தா சட்டர்ஜியை தொழில், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் (information technology) மற்றும் மின்னணுவியல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை புனரமைப்பு துறை ஆகிய துறைகளிலிருந்து அவர் நிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்தா சட்டர்ஜியை நீக்கி, எனது கட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னனியில் பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி (Chief Minister Mamata Banerjee) தெரிவித்துள்ளார்.

நாய்களுக்கு தனி மாளிகை

அமலாக்கதுறையினரால் காவலில் வைக்கப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி, தனது நாய்களுக்காக மட்டுமே தனியார் ஒரு மாளிகை வைத்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகி (Union Minister of State Meenakshi Lekhi) குற்றம் சாட்டியுள்ளார்.

பார்த்தா சட்டர்ஜி கொல்கத்தாவில் ஒரு சொகுசான மாளிகை (A luxury mansion) வைத்துள்ளார். அதில் நாய்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தது. அவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மௌனமாக உள்ளார் என மீனாக்ஷி லேகி கூறியுள்ளார்.

மேலும் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக உள்ள பார்த்தா சட்டர்ஜி, முன்பு கல்வித்துறை அமைச்சராக இருந்தப்போது, ஆசிரியர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அமலாக்க துறையினர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய நண்பர் நடிகை அர்பிதா முகர்ஜியின் (Actress Arpita Mukherjee) அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய போது, நகைகள், ரூ. 20 கோடி மதிப்பிலான ரொக்க பணத்தை அமலாக்கதுறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜியும், அர்பிதா முகர்ஜியும் ஜூலை 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க இடைநிலை கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரும், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த மானிக் பட்டாச்சார்யாவிடம் (Manik Bhattacharya) அமலாக்கதுறையினர் விசாரணை செய்தனர். ஆசிரியர் நியமன விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.