High Court : ஆர்டர்லி முறையை 4 மாதங்களுக்குள் ஒழிக்க வேண்டும்: உயர்நீதி மன்றம்

சென்னை: Orderly system to be abolished within 4 months: ஆர்டர்லி முறையை 4 மாதங்களுக்குள் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டைக் காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு (Case in Madras High Court) தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான உயர்நீதிமன்றம் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தங்களின் கீழ் பணியாற்றுபவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்தது. மேலும் உயர் அதிகாரிகள் இல்லங்களில் ஆர்டர்லிகளை பணியமர்த்துவது, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை உள்ளது ஆகியவற்றை குறித்தும் விசாரித்தார்.

காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்று தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது (The report was submitted on behalf of the Tamil Nadu Government) . அந்த அறிக்கையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க காவல்துறை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட உடன் மீதமுள்ளவர்கள் திரும்பப் பெறுவார்கள். காவல்துறை தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லிகளை பயன்படுத்த மாட்டோம் என ஐபிஎஸ் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதாக டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்தயடுத்து இந்த விவகாரத்தில் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்க தக்கது. பாராட்டுதலுக்கு உரியது என்று நீதிபதி தெரிவித்தார்.

ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது (The government is committed to abolish the orderly system) தெரிய வருகிறது. இதற்காக அரசின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு உத்தரவாதம் தெரிவித்தப்படி, ஆர்டர்லி முறையை 4 மாதங்களுக்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.