Chief Minister N. Rangasamy : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நிதி பெற தொடர்ந்து வலியுறுத்துவோம்: முதல்வர் என்.ரங்கசாமி

புதுச்சேரி: We will continue to push for statehood and funding for Puducherry : புதுவைக்கு மாநில அந்தஸ்தையும் நிதி உதவிகளையும் வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் (Puducherry Legislative Assembly) செவ்வாய்க்கிழமை கேள்வி, பதில் விவாதம், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் மீதான விவாதங்களுக்கு நிரைவாக முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியது: மத்திய அரசிடம் எதைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார்கள் என்று நினைத்தால், அது நடக்காது. மத்தியில் எந்த கட்சியின் ஆட்சி இருந்தாலும், அதை பல ஆண்டுகளாக நாம் பார்த்துள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கப்பட்டதிலிருந்து மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். இது தொடர்பாக சட்டப்பேரவையில் 13 முறை தீர்மானங்கள் போட்டுள்ளோம்.

மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் நமக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும். நமது திட்டங்களை செயல்படுத்த முடியும். இப்போதும் மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் (We are continuously urging the central government to get statehood). எம்எல்ஏக்கள் வலியுறுத்தியதைப் போல மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவோம். மாநில அந்தஸ்து அவசியமானது. ஆனால் அதற்காக கொஞ்சம் பொறுக்க வேண்டும். மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் நமக்கு அதிகாரங்கள் கிடைக்கும். அதுவரை சற்று பொறுமை காப்போம்.

ஆளுநர் உரையில் கடந்த ஓராண்டில் என்ன செய்தோம் (What we have done in the last one year in the Governor’s speech). இனி என்ன செய்யப் போகிறோம் என்பதனை அதில் சுட்டுக் காட்டப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் ஒருமித்த கருத்து உள்ள எண்ணமுடையவர்கள் இருக்கும் போது திட்டங்கள் விரைவாக செயல்படுத்த முடியும். அரசு நிர்வாகத்தில் பல சிரமங்கள் உள்ளன. கோப்புகள் சென்று, திரும்பி வருவதாக உறுப்பினர்கள் கூறினர். கடந்த கால நிர்வாகத்தின் நிலை தற்போது மாறி உள்ளது. அதனை விரைவாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். மத்திய அரசும், மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

என்ன செய்ய வேண்டும், எதனை கொண்டு வர வேண்டும் என்பதில் மாநில அரசு மிகவும் கவனமாக உள்ளது. இதனை எம்எல்ஏக்களும் சுட்டி காட்டினர். நடைமுறையில் எதை கொண்டு வர முடியும் என்பதனை கவனமுடன் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் நிதி நிலையை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதியை கேட்டுள்ளோம் (We have asked the central government for funds to improve the financial position). அது கிடைத்தால் திட்டங்கள் விரைவாக செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.