BJP MLA arrested, released on bail : நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக எம்எல்ஏ கைது செய்து, ஜாமீனில் விடுதலை

ஹைதராபாத்: Controversial comment on prophet Muhammad :நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த‌ பாஜக எம்எல்ஏ ராஜாசிங் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் கோஷமஹால் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜாசிங் (BJP MLA Rajasingh of Goshamahal Constituency). இவர் அண்மையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியை விமர்சித்து, விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இஸ்லாத்திற்கு எதிராகவும், நபிகள் நாயகத்தை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ராஜாநாத் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களிடம் கூறியது: உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் முஸ்லீம்களை துன்புறுத்தும் வகையில் கட்சி உறுப்பினர்களை பேச வைப்பதே பாஜகவின் அதிகாரபூர்வ கொள்கையாக உள்ளது.

நூபுர் சர்மா விவகாரத்தில் அவர்கள் இன்னுமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை (No lesson learned from the Nupur Sharma affair yet). நூபுர் சர்மா பேசியதின் நீட்சிதான் ராஜா சிங்கின் கருத்தாகும் என்றார். நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் குரிய கருத்தை திங்கள்கிழமை தபீர்புரா காவல் நிலையத்தில் முகமது வாஜி உதீன் சல்மான் என்பவரை திங்கள்கிழமை இரவு புகார் அளித்தார். இதனையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மதத்தின் பெயரில் இருபிரிவினிரிடையே கலகத்தை ஏற்படுத்துதல், மத உணர்வை வேண்டுமென்றே தூண்டுதல், புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவிகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராஜா சிங், அங்குள்ள் கீழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது ராஜாசிங்கை கைது செய்வதற்கு முன்பு நோட்டீஸை அளிக்காமல், போலீசார் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்த அவரது வழக்கறிஞர்கள், போலீசார் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளனர் என்றனர். இதனையடுத்து எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது (After this, the court granted bail to MLA Raja Singh). இதனைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த எம்எல்ஏ ராஜா சிங்கை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக பாஜக ஒழுங்குமுறை கமிட்டி செயலாளர் ஓம் பாதக் தெரிவித்தார். இது தொடர்பாக செப். 2-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ராஜா சிங் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.