Wrong Relationship Says Actress Anjali: நான் தப்பான உறவில் இருந்துட்டேன்: நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல்

தெலுங்கிலும் கால் பதித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவராக வலம் வந்தவர் (Wrong Relationship Says Actress Anjali) நடிகை அஞ்சலி. இவர் தெலுங்கில் அறிமுகமாகியிருந்தாலும் கற்றது தமிழ், அங்காடி தெரு, வத்திக்குச்சி, எங்கேயும் எப்போதும், இறைவி, பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் அஞ்சலி.

இதன் பின்னர் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக நீண்ட நேரமாக ஒதுங்கி இருந்தார். எப்போதாவது பாடல்களில் மட்டும் தலைக்காட்டி வந்தார். சில முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த நிலையில் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் தலைக்காட்டியுள்ளார். அதாவது விக்னேஷ் சிவன் இயக்கி வந்த கதைகளில் அஞ்சலி நடித்திருந்தார்.

இந்நிலையில், வெப் சீரியஸ் புரோமோஷனுக்கான பல்வேறு நேர்காணல்களில் பங்கேற்று வந்தார். அதில் ஒன்றில் தனது உறவில் ஏற்பட்ட சில அனுபவத்தை பகிர்ந்திருந்தார் அஞ்சலி. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தனது வாழ்க்கையில் தவறான உறவில் இருந்துவிட்டேன், இதன் காரணமாக என்னுடைய சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. தற்போது அது தவறான உறவு என்று தெரிந்த காரணத்தினால் அதில் இருந்து வெளியேறி விட்டேன். இவ்வாறு அஞ்சலி கூறினார்.