சென்னை: கொரோனா பெருந்தொற்று (Nurses Permanent) காலக்கட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட 6,000 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாலை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் 6000 செவிலியர்களுக்கு தற்காலி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு ரூ.14,000 சம்பளம் வழங்கப்பட்டது. சுமார் 6 மாத காலக்கட்டத்திற்கு பின்னர் தற்காலிகமாக பணியில் சேர்ந்த செவிலியர்களுக்கான ஆணை கொரோனா மீண்டும் அதிகரித்த காரணத்தால் கடந்த டிசம்பர் 31 20222 வரையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டபோது பணியில் சேர்ந்தவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா சமயத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.



