Vijay Ajith Movie Release On The Same Day: ஒரே நாளில் வெளியாகும் விஜய், அஜித் படங்கள்

சென்னை: நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் தமிழ் மற்ம் தெலுங்கு (Vijay Ajith Movie Release On The Same Day) உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான துணிவு படத்தில் மஞ்சுவாரியர் மற்றும் சமுத்திரக்கணனி, மகாநதி சங்கள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் ஜனவரி 11ம் தேதி திரையங்கில் வெளியாகிறது. இதனால் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ஜனவரி 10ம் தேதி ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.