RRR Naatu Naatu Song: ஆஸ்கார் இறுதிக்கு தேர்வாகி உள்ள நாட்டு நாட்டு பாடல்

சென்னை: நாட்டு நாட்டு பாடல் (RRR Naatu Naatu Song) உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வமான இல்லத்திற்கு வெளியில் படமாக்கப்பட்டுள்ள செய்திகள் தற்போது வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.

சென்னை ஆர்ஆர்ஆர் படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி நல்ல பெயரை எடுத்தது. அதாவது நாட்டுப்பற்று உள்ள படமாகவே இவை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்படத்தில் நாட்டு நாட்டு பாடல் மிகச் சிறந்த இசை ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு நாட்டு பாடல் மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.

இப்பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. எம்.எம். கீரவாணி இசையில் உருவான இப்பாடலை ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் உலகமே எதிர்நோக்கிய நாடான உக்ரைனில் படமாக்கப்பட்டதுதான் அதுவும் அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது இன்னொரு சிறப்பான விஷயம். இத்தகவலை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியுள்ளார்.

இது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது. மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு தொலைக்காட்சி நடிகராக இருந்த காரணத்தினால் படம் நடைபெறுவதற்கு ஒப்புக்கொண்டார் என்று ராஜமவுளி கூறியுள்ளார்.

இந்நிலையில், 92வது ஆஸஅகார் விழா அடுத்த ஆண்டு 2023ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. இதனால் கோலிவுட், பாலிவுட் சினிமா வட்டாரங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Teacher Dharna Students House: வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன்பு ஆசிரியர் தர்ணா

முந்தைய செய்தியை பார்க்க:Midnight terror in Kanchipuram: நள்ளிரவில் 7 பேரை வெட்டி அலறவிட்ட கொள்ளை கும்பல்