Former Minister Sellur Raju: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்டவர்கள் கிடைத்தால் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

மதுரை: மதுரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் (Former Minister Sellur Raju) எம்.ஜி.ஆர். சிலை மீது மர்ம நபர்கள் காவி துண்டை அணிவித்து சென்றனர். இது பற்றி தகவல் கிடைத்த உடன் போலீசார் காவித்துண்டை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காவித்துண்டு சம்பவம் தொடர்பாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது: அ.தி.மு.க. ஒரு கட்டுப்கோப்பான இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஜாதி மதத்தை கடந்து அப்பாற்பட்டவர் ஆவார். அவர் ஒரு தெய்வபிறவி.

அப்படிப்பட்டவரின் சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவியே கிடையாது, ஒரு இழிவான பிறவிகள். எம்.ஜி.ஆரை பொறுத்தமட்டில் ஏழை, எளிய மக்களுக்கு தெய்வமாக விளங்கியவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளின் உரிய குணத்தை கொண்டவர்கள்.

மேலும் காவித்துண்டை எங்கு போட வேண்டுமோ அங்குதான் போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும். அதனை தரையில் போட்டு மிதிப்பது தவறு. அது போன்று நாடே போற்றும் மக்கள் தலைவரை காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் மிகவும் இழிவான பிறவிகள் ஆவர். தமிழக அரசு இது போன்றவற்றை வேடிக்கை பார்க்காமல் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இது போன்ற பிறவிகள் எங்களிடம் சிக்கினால் அவர்களை காலில் போட்டு மிதித்து விடுவோம். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Vaikom Vijayalakshmi Interview: மீண்டும் திருமணம் என்றாலே பயமாக உள்ளது: பாடகி வைக்கம் விஜயலட்சுமி

முந்தைய செய்தியை பார்க்க:Teacher Dharna Students House: வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன்பு ஆசிரியர் தர்ணா