பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் முன்கூட்டியே வெளியிடுவதற்கான பணிகள் தீவிரம்

சென்னை : Ponniyin Selvan Part II is in full swing for its early release : மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி (Vikram, Karthi, Jayam Ravi, Sarathkumar, Prabhu, Vikram Prabhu, Jayaram, Trisha, Aishwarya Rai, Aishwarya Lakshmi) என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர் . முதல் பாகத்தை எடுத்தபோதே இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது.

இரண்டு பாகங்களுமே சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்ததாகவும் (Both parts were prepared with a budget of around Rs.500 crore), அந்த தொகை முழுவதும் முதல் பாகத்திலேயே கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முதல்பாகம் வசூல் தியேட்டர் வெளியீட்டில் மட்டுமே ரூ.500 கோடியை தாண்டி பாகத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடிக்கு மேல் விலை போய் அந்த தொகை லாபமாக வ‌ந்துள்ளது என்கின்றனர்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வசூல் முதல் பாகத்தை மிஞ்சம் வகையில் இருக்கும் (Ponniyin Selvan second part will surpass the first part in collections) என்று படக் குழுவினர் நம்புகிறார்கள். இரண்டாம் பாகத்துக்கான டப்பிங், கிராபிக்ஸ், ரீரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் சென்னை மற்றும் மும்பை ஸ்டியோக்களில் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர் (The second part was planned to be released in August next year). ஆனால் தற்போது அதற்கு முன்பே திட்டமிட முடிவு செய்து, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகம் குறிப்பிட்ட தேதியை விட இரண்டொரு மாதங்களுக்கு முன்பே வெளியாகும் எனக் கூறப்படுகிறது.