Electoral roll revision work special camp : தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்

சென்னை : Electoral roll revision work special camp across Tamil Nadu : வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் , தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.

தேர்தலின் போது, வாக்களிக்க அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி இடங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணி சிறப்பு முகாம்கள் (Special camps for revision of voter list) நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமையைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற் கொள்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் திரு தங்களைச் செய்ய ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளிலும், இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு (Special camps are organized on two Saturdays and two Sundays in November) செய்யப்பட்டுள்ளன. அதன்படி , முதல் சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ .12) நடைபெற்றது. இரண்டாவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ .13) நடைபெறவுள்ளது.

சிறப்பு முகாமுக்குச் செல்வோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்வது போன்ற பணிகளுக்காக உரிய மனுக்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான 6 பி படிவம் வரையறுக்கப்பட்டுள்ளது (Form 6B has been defined for linking Aadhaar number with electoral roll). இந்தப் படிவத்தையும், சிறப்பு முகாமின் போது பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இன்று மட்டுமின்றி நவ. 26, 27 ஆம் தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் , தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் (Election Department officials) தெரிவித்தனர்.