Kicha Sudeep’s Vikrant Rona : கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோனா பாக்ஸ் ஆபிஸில் புதிய அலை

கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ள விக்ராந்த் ரோனா படத்தை அனுப் பண்டாரி இயக்கியுள்ளார். கன்னடத் திரையுலகின் அடுத்த பெரிய வெற்றிப்படம் விக்ராந்த் ரோனா. கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோனா பாக்ஸ் ஆபிஸில் புதிய அலைகளை உருவாக்கி வருகிறது. கடந்த‌ 15 நாட்களுக்குப் பிறகும், அந்தப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது (Kicha Sudeep’s Vikrant Rona is making waves at the box office).

இப்படம் தென்னிந்தியாவின் மற்றொரு சூப்பர் ஹிட் (Another super hit from South India) முயற்சியாகும். ஃபேண்டஸி படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடியைத் தாண்டி லாபத்தை அனுபவித்து வருவதாக அதன் விநியோகதஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். 3டியிலும் வெளியான இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. யஷ்ஷின் கேஜிஎப் 2 க்கு பிறகு, ரக்ஷித் ஷெட்டியின் 777 சார்லி ஆகிய படங்களுக்குப் பிறகு, சாண்டல்வுட்டின் அடுத்த பெரிய வெற்றிப் படம் விக்ராந்த் ரோனா என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

விக்ராந்த் ரோனா, அனுப் பண்டாரி இயக்கிய (Directed by Anup Bhandari) இந்தப்படம் கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மளையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள ஃபேண்டஸி ஆக்ஷன் திரைப்படமாகும். இதில் நிருப் பண்டாரி, அறிமுக நடிகை நீதா அசோக் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் கிச்சா சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி இந்த படத்தின் முதற்கட்ட போட்டோஷூட் தொடங்கியது. பாண்டம் என்ற தலைப்பில் படப்பிடிப்பு மார்ச் 2 ஆம் தேதிய‌ன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. நடிகர் சுதீப்பின் கோடிகொப்பா 3 மற்றும் பாண்டம் ஒரே நேரத்தில் தொடங்கியது. தயாரிப்பாளர்கள் முதலில் சுதீப்பின் மருமகன் சஞ்சித் சஞ்சீவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டனர், ஆனால் அவருக்கு பதிலாக நிரூப் பண்டாரியை தேர்வு செய்தனர். இரண்டாவது அட்டவணைக்குத் தயாராகும் போது, ​​குழு கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது (It was hit hard by the corona virus). இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூன் 13 அன்று, படக்குழு ஜூலை மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது.

பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கரோனா தொற்றின் பாதிப்பிற்கு மத்தியில் ஒரு பெரிய அடர்ந்த காடுகளை உருவாக்கி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தனது பணியை மீண்டும் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில்(Annapurna Studios and Ramoji Film City) பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது. மற்ற படப்பிடிப்பு மல்ஷேஜ் காடு, மகாபலேஷ்வர் மற்றும் கேரளாவில் நடந்தது.

இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் (Music composer B.)இப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார், இது நடிகர் சுதீப்புடன் அவர் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும். இசை உரிமையை லஹரி மியூசிக் வாங்கியுள்ளது. விக்ராந்த் ரோனா திரைப்படம் கன்னட மொழியில் 2022 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.