New Movie Chance to Actress Keerthy Suresh: தேசிய விருதால் கிட்டிய வாய்ப்பு: சோலோவாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்

சென்னை: New Movie Chance to Actress Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றதால் மீண்டும் நடிக்க இயக்குனர் சுதா கொங்கரா வாய்ப்பளித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2000ம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும், கடந்த 2014ம் ஆண்டு கீதாஞ்சலி படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருதும், சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதும், சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருதும், சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருதும் பெற்றுள்ளார்.

Also Read: Pooja Hegde lamentation: அந்த படத்தில் நடித்திருந்தால்.. பூஜா ஹெக்டே புலம்பல்

கடந்த 2018ம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது – மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் (தமிழில் – நடிகையர் திலகம்) பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் நடித்தமைக்காக வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், தெலுங்கில் உருவாகி வரும் தசரா, போலோ ஷங்கர் ஆகிய படங்களும் கீர்த்தியின் கைவசம் உள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் சோலோ ஹீரோயினாக கீர்த்தி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதையை இயக்குனர் சுதா கொங்கரா தற்போது எழுதி வருகிறாராம்.

சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகள் முடிந்த பின், கீர்த்தி சுரேஷின் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா இருவருமே தேசிய விருது வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.