Vacancies for Tamil Nadu State Adoption Resource Agency: மாநில தத்துவள ஆதார மையத்தில் திட்ட இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை:Vacancies for Tamil Nadu State Adoption Resource Agency: மாநில தத்துவள ஆதார மையத்தில் திட்ட இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சமூக பாதுகாப்புத் துறையின் சமூக பாதுகாப்பு இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில தத்துவள ஆதார மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட முற்றிலும் தற்காலிக பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர் மாநில தத்து வள ஆதார மையத்தின் முற்றிலுமாக தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் இவர்கள் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

தொகுப்பூதயம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவி: திட்ட அலுவலர்
பணியிடம்: மாநில தத்துவள ஆதார மையம், சென்னை
காலி பணியிட தொகுபூதியம்: ரூ.34755

கல்வித்தகுதி: சமூக பணி/ சமூகவியல்/ குழந்தைமேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம் உளவியல்/மனநலம் சட்டம் / பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து பெற்றிருத்தல் வேண்டும். (10+2+3) முறையில் கல்வி பயின்றிருத்தல் வேண்டும்.
அல்லது சமூக பணி/ சமூகவியல்/ குழந்தை மேம்பாடு மனித உரிமைகள் பொது நிர்வாகம் உளவியல்/மனநலம் சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து பெற்றிருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை / சமூக நலம் துறை ஆகியவற்றில் திட்டம் உருவாக்குதல், செயல்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். (10+2+3) முறையில் கல்வி பயின்றிருத்தல் வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:- 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிப்பதற்கான உரிய விண்ணப்ப படிவம் ஆகியவற்றை http://www.tn.gov.in/job opportunity என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்த விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் 26.08.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்க்க ண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்களும் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் தகவலின்றி நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர்,
மாநில தத்துவள ஆதார மையம்,
சமூக பாதுகாப்புத் துறை,
எண்:300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லீஸ், சென்னை-10.

The Director of Social Defence,
State Adoption Resource Agency,
Department of Social Defence,
No.300 Purasawalkam High Road,
Kellys, Chennai -600010.
Phone: 044-26423050