Kangana Ranaut supports Elon Musk: ட்விட்டர் கட்ணத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு

புதுடெல்லி: Kangana Ranaut supports Elon Musk’s decision to charge USD 8 for verified accounts on Twitter. ட்விட்டரின் புளூ பேட்ஜ் கட்டண அறிவிப்புக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதிலிருந்து ஊழியர்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களை ஏராளமானோரை நீக்கி எலன் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். எலன் மஸ்கின் நடவடிக்கைகள் இணையத்தில் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

இதனிடையே ட்விட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் ‘ட்விட்டர் புளூ’ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு (புளூ பேட்ஜ்) மாதந்தோறும் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக எலன் மஸ்க் அறிவித்தார். சிறப்பு அம்சங்களை கொண்ட ‘ட்விட்டர் புளூ’ வசதி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மட்டுமே தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்த முடிவை நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இப்போது இருக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக ட்விட்டர் திகழ்ந்து வருகிறது.

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘ட்விட்டர் புளூ’ வசதி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் எளிமையாக மாற வேண்டும். இந்த உலகில் எதுவும் இலவசம் கிடையாது. எனவே ட்விட்டர் கட்டணம் வசூலிப்பதில் தவறொன்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.