Pak Vs Kiwis : அரையிறுதியில் இங்கிலாந்து vs இந்தியா, மற்றொரு அரையிறுதியில் பாக் Vs கிவிஸ்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2022) போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் யார் எதிரணி என்பது உறுதியாகிவிட்டது.

மெல்போர்ன்:(Pak Vs Kiwis) ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2022) போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, அரையிறுதியில் யார் எதிரணி என்பது உறுதியாகிவிட்டது.

குரூப்-2ல் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது (India Vs England Semifinal). இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 10) நடைபெறுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் (New Zeeland Vs Pakistan Semifinal) அணிகள் நேருக்கு நேர் மோதும் இந்த ஆட்டம் (Pak Vs Kiwis) புதன்கிழமை (நவம்பர் 9) சிட்னியில் நடைபெறுகிறது.

சூப்பர்-12 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி குரூப்-2ல் முதலிடம் பிடித்தது. 5 லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 4ல் வெற்றி (Indian team wins in 4) பெற்று, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் தோல்வியை தழுவியது. இறுதியாக 8 புள்ளிகள் பெற்ற ரோஹித் சர்மா அணி குழுவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான், விளையாடிய 5 ஆட்டங்களில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று குரூப்-2ல் 2-வது இடத்தைப் பிடித்தது.

மறுபுறம், குரூப்-1 இலிருந்து அரையிறுதிக்கு வந்துள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய ஐந்து போட்டிகளில் தலா 7 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ஆனால் நல்ல ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து குரூப்-1ல் முதலிடம் பிடித்துள்ளது (In terms of run rate, New Zealand has topped Group-1).

டி20 உலகக் கோப்பை (T20 World Cup) அரையிறுதி வரிசை

நியூசிலாந்து Vs பாகிஸ்தான்
இடம்: சிட்னி கிரிக்கெட் மைதானம்
போட்டி ஆரம்பம்: பிற்பகல் 1.30 (IST)
இந்தியா Vs இங்கிலாந்து
இடம்: அடிலெய்ட் ஓவல், அடிலெய்டு
போட்டி ஆரம்பம்: பிற்பகல் 1.30 (IST)