Brahmastra unreleased songs to be out this Dussehra: பிரம்மாஸ்திரா படத்தின் வெளியிடப்படாத பாடல்கள் தசரா அன்று ரிலீஸ்

சென்னை: Brahmastra unreleased songs to be out this Dussehra. பிரம்மாஸ்திரா படத்தின் வெளியிடப்படாத பாடல்கள் தசரா அன்று ரிலீஸ் செய்வதாக இயக்குனர் அயன் முகர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில், புதிய வீடியோ மற்றும் அறிவிப்புகளுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். அதில், “பிரம்மாஸ்திராவின் இசை ஆல்பத்தில் சில செய்திகள். நாங்கள் வெளியிடப்படாத பாடல்கள் இன்னும் நிறைய உள்ளன. ரசியா… எங்கள் சிவன் தீம்… போன்ற எங்களின் முதன்மைப் பாடல்களின் மற்ற பதிப்புகள்… பிற தீம்கள்… போன்றவைகள். இதை வெளியிடாததற்கு முக்கிய காரணம் திரைப்படத்தை வெளியிடவும், சரியாக முடிக்க கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இந்தப் பாடல்களை வெளியிடுவதற்கு சரியான தருணத்தை முடிவு செய்ய முடியவில்லை.” என பதிவிட்டிருந்தார்.

மேலும் வரும் அக்டோபர் 5ம் தேதி தசரா பண்டிகையின்போது இந்த பாடல்கள் வெளியிடப்படும் எனவும் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், அயனின் பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் இதுவரை 225 கோடி ரூபாய் என்று ஒரு போஸ்டருடன் தொடங்கிய ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதைத் தொடர்ந்து மகத்தான வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரன்பீர் மற்றும் ஆலியாவுடன் இணைந்து ‘பிரம்மாஸ்திரா’ படத்தை அயன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் தென்னக நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படம் இந்தியில் ரூ.130.50 கோடி, தென் இந்திய மொழிபெயர்ப்பில் ரூ.17.25 கோடி வசூலீத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள.