Assistant commissioner : காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய அதிர்ச்சி காட்சி

கொல்கத்தா: (Assistant commissioner attacked) மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. கொல்கத்தா போர்க்களமாக மாறிவிட்டது. செவ்வாய்க்கிழமை பாஜக தொண்டர்களின் ‘நபன்னா’ பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக, காவல்துறை உதவி ஆணையர் தாக்கப்பட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவ இடத்தில் உதவி கமிஷனரை ஒரு கும்பல் கொடி கம்புகளால் தாக்கியது (Attacked by flagpoles). கூட்டத்தின் நடுவே போலீஸ் அதிகாரி சிக்கிக் கொண்டார். அவர் மர்மநபர்களின் கைகளில் இருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் விடாமல், போலீஸ் அதிகாரியின் காலரைப் பிடித்து இழுத்து தாக்கினர். அவர்களிடம் தப்பியோட முயன்ற அவரை தரையில் தள்ளி. கொடி கம்புகளால் கண்மூடித்தனமாக தாக்கினர். அதிர்ஷ்டவசமாக, போலீஸ் அதிகாரி ஹெல்மெட் அணிந்திருந்தார் மற்றும் தலையில் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை, பின்னர் போலீஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியவர்களின் கைகளில் இருந்து தப்பினார்.

செவ்வாய்கிழமைய‌ன்று மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு எதிராக பாஜக பெரும் போராட்டத்தை நடத்தியது (BJP led a massive protest against the West Bengal government). அண்மைக் காலமாக மேற்கு வங்க அரசு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அதிக அளவில் பணம் சிக்கியது. அரசின் தவறான நிர்வாகத்துக்கு எதிராக கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நபன்னா பேரணி மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இதனையொட்டிமேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் கிராமங்களில் இருந்து பாஜகவினர் கொல்கத்தாவிற்கு திரண்டு வந்தனர்.

மறியல் செய்ய வந்தவர்களை போலீசார் நடுரோட்டில் தடுத்து நிறுத்தினர். சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பாஜக மூத்த தலைவர்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். பின்னர், போராட்டம் வன்முறையாக மாறியது (The protest turned violent). போராட்டக்காரர்களின் ஒரு குழு போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது.

போராட்டம் தொடர்பாக 1,235 க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறைப் போராட்டத்தின் போது அவர்களில் மூவர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை நடந்த போராட்டம் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே மற்றொரு பெரிய மோதல் உள்ளதை (It revealed another major clash between the BJP and the Trinamool Congress) வெளிப்படுத்தியது.