Actress Ramya : நாளை அதிகாரப்பூர்வமாக குட் நியூஸ்’ : ரசிகர்களை குழப்பி விட்ட நடிகை ரம்யா

Good News : நாளை அதிகாரப்பூர்வமாக காலை 11.15க்கு உங்களுக்கு இனிய செய்தி தருகிறேன் என்று ரம்யா சோஷியல் மீடியாவில் தகவல் தெரிவித்தார்.

Actress Ramya : 90 களில் பிறந்தவர் பாலிகே சாண்டல்வுட் நடிகை ரம்யா. அதாவது இவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் ட்ரீம் கேர்லாக இருந்தவர். தற்போது நடிகை ரம்யா தற்போது திரையுலகில் இருந்து தொலைவில் இருந்தாலும், பலருக்கு அவர்தான் இன்றுவரை ஃபேவரிட் ஹிரோயின் உள்ளார்.ஒரு காலத்தில் பல‌ ஹிட் திரைப்படங்களை வழங்குகிய நடிகை ரம்யா படிப்படியாக அரசியலுக்கு தாவினார். ஆனால் அதன் பிறகு அவர் அரசியலில் தொடர்ந்து செயல்படாமல் விலகி உள்ளார்.

சினிமா மற்றும் அரசியல் (Cinema and Politics) ஆகிவற்றில் இருந்து நடிகை ரம்யா சில காலம் விலகி இருந்த அவர், சில ஆண்டுகள் அவர் எங்கு உள்ளார் என்று பலருக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவர் அப்படியில்லை. நடிகை ரம்யா சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக உள்ளார். இது மட்டுமின்றி சினிமா துறையின் பல‌ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

நடிகை ரம்யா எப்படி இருந்தாலும் பொதுவாக திரைப்படங்களில் நடித்தால் போதும் (Acting in movies is enough) என்று அவரின் ரசிகர்கள் காத்துள்ளனர். அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்பது என்றால் உங்கள் திருமணம் எப்போது ? உங்கள் அடுத்த திரைப் படத்தை எப்போது பார்க்க முடியும் ?. சில நாட்களுக்கு முன்புதான் ராஜ் பி ஷெட்டி ஜோடியாக நடிகை ரம்யா திரைப்படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த வத‌ந்தியை ராஜ் பி ஷெட்டி கிளப்பி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது இது போன்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார் (She shared on her Instagram account). நாளை அதிகாரப்பூர்வமாக காலை 11.15க்கு உங்களுக்கு இனிய செய்தி தருகிறேன் என்று நடிகை ரம்யா சோஷியல் மீடியாவில் தகவல் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ரம்யா பகிர்ந்துகொண்டதால் அவரது ரசிகர்கள் குழப்ப‌த்தில் ஆழ்ந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியன்று (Ganesha Chaturthi) நடிக்கை ரம்யா எந்த நல்ல செய்தியை கொடுக்கலாம் ?. அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பாரா? அல்லது புதிய திரைப்படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பாரா ? என்று தெரியவில்லை. அப்படி திரைப்படத்தில் நடிப்பார் என்ற அறிவிப்பதன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு கம்பாக் செய்வாரா? என்ற பல்வேறு யோசனைகள் அவரது ரசிகர்களின் மனத்தில் எழுந்து, குழம்பிப் போய் உள்ளனர். ஆனால் நடிகை ரம்யா கூறியுள்ள அந்ட்ஜா குட் நியூஸ் எது என்று தெரிந்து கொள்ள நாளை காலை 11.15 வரை காத்திருக்க வேண்டும்.