Actor Vadivelu’s mother passed away: நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

மதுரை: Comedian Vadivelu’s mother passed away due to ill health in Veerakanur, Madurai. மதுரை வீரகனூரில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு, சில ஆண்டுகளாகவே சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

நடிகர் வடிவேலு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்து வருக்கிறார். மேலும் பி.வாசு இயக்கி வரும் ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மீண்டும் சினிமாவில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கி, வடிவேலு ‘பிஸி’யாக நடித்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது தாயார் வைத்தீஸ்வரி என்கிற பாப்பா காலமானார். அவருக்கு வயது 87. மதுரை வீரகனூரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தாயாரை இழந்து தவிக்கும் வடிவேலுவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

நடிகர் வடிவேலு, படங்களில் அம்மாவை மதிக்காத மகன் போல, படத்துக்கான கேரக்டரில் அப்படி நடித்தாலும், உண்மையில் அவர் தாய்ப்பாசம் மிக்கவர். டிவி நேர்காணல்களில் பலமுறை பங்கேற்ற அவர், தனது குடும்பத்தை பற்றி, தனது தாய் வைத்தீஸ்வரியை பற்றி மிக பெருமையாக, உருக்கமாக பேசுவார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு டிவி சேனலில் பேட்டியளித்த வடிவேலு, இளையராஜா பாடிய, என்னை பெத்த ஆத்தா, கண்ணீரை தான் பார்த்தா’ என்ற பாடலை கேட்டு, கண்கலங்கி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.