அட தங்கத்தை இப்படி கூட வாங்கலாம் !

gold-and-silver-rate-in-chennai
தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலோக வடிவில்லாத, காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடங்குகிறது.தங்கப் பத்திரம் 2021-22 திட்டம்: ரிசர்வ் வங்கியின் படி, எட்டாவது தவணைக்கு ஒரு கிராம் தங்கத்தின் மதிப்புக்கு இணையான யூனிட்டுக்கு ₹ 4,791 வெளியீட்டு விலை.

அரசாங்கத்தால் நடத்தப்படும் 2021-22 தங்கப் பத்திரத் திட்டத்தின் எட்டாவது தவணை நவம்பர் 29, 2021 திங்கட்கிழமை அன்று சந்தாவிற்குத் திறக்கப்படுகிறது.

எட்டாவது தொடர் முதலீட்டாளர்களுக்கு நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை – ஐந்து நாட்களுக்குத் திறக்கப்படும். 2021-22 தங்கப் பத்திர திட்டத்திற்கான அட்டவணையை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமைத்துள்ளது.

திட்டம் 2021-22 தொடர் VIIIக்கு, மத்திய வங்கி ஒரு யூனிட்டுக்கு ₹ 4,791 வெளியீட்டு விலையை நிர்ணயித்துள்ளது – இது ஒரு கிராம் தங்கத்தின் மதிப்புக்கு சமம்.

தங்கப் பத்திரங்கள் திட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்பும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் – எந்த டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தினால், ஒரு யூனிட்டுக்கு ₹ 50 தள்ளுபடி பொருந்தும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.