தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.மழை பெய்யும் மாவட்டங்கள் எல்லாம் சாலைகள் தண்ணீர் தேங்கியுள்ளன..தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகின்றது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தஞ்சை,திருவாரூர்,கடலூர்,நகை,மயிலாடுதுறை,ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மிககனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.