Donkey Milk: கழுதை பால் புரட்சி!!

சுமை சுமக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கழுதை, தற்போது விவசாயிகளுக்கு உதவியாகவும் உள்ளது. அப்படியானால் கழுதையின் சிறப்பு என்ன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. பதில் இந்த கட்டுரையில் உள்ளது. (Donkey Milk).

Donkey Milk: பொதுவாக சொன்ன வேலையை செய்யாத போது திட்டுவது “கழுதை மேய்க்க போ” என்று சொல்வதாக இருக்கும். நம் சமூகத்தில் மனிதர்களை விலங்குகளுடன் ஒப்பிடுவது வாடிக்கை. அது மனித இயல்பு என்றாகிவிட்டது. ஆனால் எதிர்காலத்தில் கழுதை மேய்க்க போ என்று செல்வது லாபகரமானது! சுமை சுமக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கழுதை, இப்போது விவசாயிகளுக்கு உதவியாகவும், அவர் வருமானத்திற்கும் வழி வகுக்கும் வகையில் புரட்சி செய்ய உள்ளது. அப்படியானால் கழுதையின் சிறப்பு என்ன என்ற கேள்வி இயல்பாக எழும்.

ஆம் நாம் அனைவரும் பசு மற்றும் எருமை பால் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அண்மைக்காலமாக பால் புரட்சியில் கழுதை பாலும் தன்னை இணைத்துக் கொள்கிறது.. இந்த கழுதை பால் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள நோயை எதிர்க்கும் சக்தி தான். கரோனா தொற்றுநோய்களின் போது நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு முக்கியம் என்பதை நாம் ஏற்கனவே உணர்ந்துள்ளோம். கழுதைப் பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். ஹரியானா மற்றும் குஜராத்தின் வதேராவில் காணப்படும் ஹலாரி கழுதைப்பால் சிறப்பு வாய்ந்தது. உடல் அழகை அதிகரிப்பது மட்டுமின்றி, புற்றுநோய், உடல் பருமன், அலர்ஜி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. இது தவிர, சீஸ், சோப்பு, ஃபேஸ் வாஷ், ஸ்கின் கிரீம்களும் இந்த பாலில் இருந்து எடுக்கப்படும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த பாலில் குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் அதிக புரதச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன்டி-ஏஜிங் இருப்பதால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை பயன்கள் கொண்ட கழுதைப்பாலின் விலை என்ன என்ற கேள்வி எழுவது இயல்பு. இந்த பாலின் விலையை கேட்டால் அதிர்ச்சியடைய வேண்டாம். ஏனெனில் ஒவ்வொரு லிட்டர் பாலின் விலையும் குறைந்தபட்சம் ரூ. 5000 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கழுதைப்பாலின் தேவை அதிகரித்து வருவதால், தேசிய ஆராய்ச்சி மையம் (NRCE) அரியாணாவின் ஹிசாரில் கழுதை பால் பால் பண்ணையை அமைத்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதல் கழுதைப் பால் பண்ணை என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதைத் தவிர மற்ற மாநிலங்களிலும் கழுதைப்பால் பால் பண்ணை இருக்குமா என்ற கேள்வி உங்களுக்கு எழும். ஆம் தென்னிந்தியாவில் கர்நாடகம் மங்களூரில் கழுதைப் பால் பண்ணை விரைவில் திறக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் லிட்டருக்கு ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்படும் கழுதைப்பால் பால் பண்ணை, தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பன்ட்வால் வட்டத்தில் மஞ்சியில்,விரைவில் தொடங்கப் பட‌வுள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியரான ராமநகர மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாச கவுடா இந்த புதுமையான திட்டத்திற்கான‌ கனவு கண்டுள்ளார். நாட்டிலேயே கர்நாடகாவின் முதல் மற்றும் புதுமையான பால்பண்ணையாக இது இருக்கும். இது மாநில விவசாயிகளுக்கும், கழுதை வளர்ப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

எதிர்காலத்தில் பால் பண்ணை துறையில் வெற்றி பெறுபவர்களுக்கு கழுதைப்பால் புதிய வழியை அளித்து வாழ்க்கையை பொன்னாக்கும். பசுக்களைப் போலவே கழுதைகளும் தினமும் 5 முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்க முடியும். ஏனெனில் ஒவ்வொரு கழுதையும் ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் மட்டுமே தருகிறது. இதனால் அதிகளவில் கழுதைகளை வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும். வேலையில்லாதவர்களும் கழுதைப் பால் மூலம் வருமானம் ஈட்டும் வகையில் கழுதை வளர்ப்பை அரசு ஊக்குவிக்கும். எனவே கழுதை மேய்க்கப் போ என்று சொல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.