Mekedatu project : விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழகம் ஒப்புதல் அளிக்காமல் மேக்கேதாட்டு திட்டத்தை தொடங்க முடியுமா?

பெங்களூரு: Mekedatu project : மேக்கேதாட்டு திட்டத்திற்கு தமிழகம் தடையாக உள்ளதாக கர்நாடகம் கூறி வருகிறது. காரணம் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழகம் ஒப்புதல் அளிக்காமல் மேக்கேதாட்டு திட்டத்தை ஒரு போதும் தொடங்க முடியாது.

ஆனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் மேக்கே தாட்டு திட்டத்தை செயல்படுத்தினால், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கை போட்டு பாஜக அரசு திட்டத்தை செயல்படுத்த துடித்து வருகிறது.

கர்நாடகாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேக்கேதாட்டு திட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் தடையாக இருந்து வருவதாக கர்நாடகம் கருதுகிறது. தமிழகம் அதே போக்கை தொடருவதால், அணை கட்டுவதற்கு சாத்தியமாகது என்பதால். விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடகம் காவிரி நீர் மேலாண்மையை தொடர்ந்து கேட்டு வருகிறது.

ஆனால் கர்நாடகாவின் இந்த முயற்சியால் எச்சரிக்கையான‌ தமிழகம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி மேக்கேதாட்டு திட்டம் குறித்த வழக்கை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேக்கேதாட்டு விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு அதில் தமிழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதால், இதனை கைவிட்டு தேர்தலுக்கு முன்பாக வேறு ஒரு பிரச்னையை கையில் எடுத்து, கர்நாடக மக்களின் வாக்கை பெறுவது குறித்து கர்நாடகத்தை ஆளும் பாஜக ஆலோசித்து வருகிறது.

கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வாக்கு வங்கிக்காக காவிரி பிரச்னையை கையில் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. மேக்கேதாட்டில் அணை கட்டவில்லை என்றால், பெங்களூரு, பெங்களூரு ஊரகம், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவிற்கு எதிர்ப்பு ஏற்படும்.

இதனால் தேர்தலில் தங்களுக்கு வாக்கு குறையலாம் என்பதால், மேக்கேதாட்டு திட்டத்திற்கான மாற்று வழியை ஆராய்ந்து வருகிறது. விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழகம் ஒப்புதல் அளிக்காமல் மேக்கேதாட்டு திட்டத்தை தொடங்க முடியாது என்பதே உண்மையான நிலைமை.