Vijay Mallya : விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

தில்லி: Vijay Mallya : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதய் லலித், பி.எஸ்.நரசிம்மா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையா குற்றவாளி என ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது மல்லையா இல்லாததால் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு தாய்நாட்டிலும் சிரமம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையுடன், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எஸ்பிஎம் தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு மனு மீதான வழக்கை விசாரித்து, உச்ச நீதிமன்றம் மல்லையா குற்றவாளி என தீர்ப்பு கூறியது. ஆனால் தண்டனையை தள்ளி வைத்தது. சுமார் 50 நாட்கள் கோடை விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் தொடங்கிய உச்சநீதிமன்றம், மல்லையா மீதான வழக்கின் தீர்ப்பை திங்கள்கிழமை அறிவித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதய் லலித், பி.எஸ்.நரசிம்மா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையா குற்றவாளி என ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது மல்லையா இல்லாத நிலையில் தண்டனை விவரத்தை அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி 2017-ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய மல்லையா, நீதிமன்ற உத்தரவை மீறி 40 மில்லியன் டாலர்களை தனது பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார். இதனைத் தொடர்ந்து மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.

மேலும் வங்கிகளின் கூட்டமைப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 40 மில்லியன் டாலர்களை வங்கிகளுக்கு செலுத்த மல்லையாவுக்கு உத்தரவிட்டது. மேலும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 8 சதம் வட்டி கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. பணத்தை செலுத்த விஜய் மல்லையாவுக்கு 4 வார கால அவகாசம் அளித்த நீதிமன்றம், பணத்தை செலுத்தாவிட்டால் சொத்துகளை பறிமுதல் செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.