Red orange Alert : மாநிலத்தில் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை: சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கலபுர்கி, பீத‌ர், சிக்கமகளூரு, உடுப்பி, கார்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு: Red orange Alert : மாநிலம் முழுவதும் வருண பகவானின் கொந்தளிப்பு அதிக அளவில் உள்ளது. காவேரி, துங்கபத்ரா, ஹேமாவதி, நேத்ராவதி பயஸ்வினி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், வீடுகள், தோட்டங்கள், வயல் நிலங்கள், கால்நடைகளை இழந்துள்ளதோடு, 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மாநிலம் முழுவதும் ஜூலை 14-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வளிமண்டல அழுத்தம் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநிலத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும், மழை காரணமாக உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில் ஜூலை 13 வரை சிகப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மழை முன்னறிவிப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளதுடன், மாநிலத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு சிகப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

மாநிலத்தின் கடலோரப் பகுதியில் புயலின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் இருக்கும் என்றும், 65 கி.மீ., வரை வீச வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், மலைப்பகுதி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்திற்கு ஜூலை 14-ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கர்நாடகத்தின் உள்பகுதியிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெலகாவி, பீத‌ர், தார்வாட், ஹாவேரி, கலபுர்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்புர்கி, பீத‌ர், சிக்கமகளூரு, உடுப்பி, கார்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் ஸ்தம்பித்துள்ளது விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அழுகி வருகின்றன. இதற்கிடையில், மாநிலத்தில் அதிக அளவில் மழை சேதம் ஏற்பட்டுள்ள நிலையிலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதும் இல்லை. மக்களின் பிரச்னைகளை கேட்பதும் இல்லை. இந்நிலையில், நாளை முதல் உடுப்பி, மங்களூரு, கார்வார் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை, பார்வையிட்டு, அங்குள்ள‌ மக்களின் குறைகளை கேட்டறிகிறார்.