1.5% subsidy on agricultural loans: ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 1.5 சதவீத மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: Cabinet approves Interest subvention of 1.5% per annum on Short Term Agriculture Loan upto Rupees Three lakh: ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.3 லட்சம் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு 2022-23 நிதியாண்டு முதல் 2024-25 வரை 3 லட்சம் ரூபாய் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க 2022-23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட்டி மானிய அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதி செய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதிநிலையையும் சாத்தியத் தன்மையையும், உறுதி செய்யும். குறுகிய கால வேளாண் கடன் என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் கிடைக்கும் என்பதால், வேலைவாய்ப்பு உருவாகவும் வழிவகுக்கும்.

உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4% வட்டிவிகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும்.

மேலும் அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்ட கடனுதவிக்கான நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 4.5 லட்சம் கோடி ரூபாய், 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால், கடனுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவசர கால கடனுதவி திட்டம் 31.3.2023 வரை செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கீழ் 5.08.2022 வரை 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது