Minister Sasikala Jolle : மாநிலத்தில் உள்ள மடங்கள், மத நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக ரூ.142 கோடி சிறப்பு மானியம்: அமைச்சர் சசிகலா ஜொல்லே

178 மடங்கள், 59 கோவில்கள் மற்றும் 26 சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு, அனைத்து சமூகங்களின் மடங்கள் மற்றும் மத நிறுவனங்களுக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு : Special grant of Rs.142 crore for the development of monasteries and religious institutions : மாநிலத்தில் உள்ள மத நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பாஜக அரசு உறுதுணையாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மிகப்பெரிய அளவிலான மானியங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.142.59 கோடி கூடுதல் மானியம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை, ஹஜ் மற்றும் வக்ஃப் துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலத்தில் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 178 மடங்களுக்கு (For 178 monasteries) ரூ. 108.24 கோடி, 59 கோயில்களுக்கு ரூ. 21.35 கோடி, 26 கோவில்களுக்கு ரூ. 13 கோடியும் மானியமாக வழங்க அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு மொத்தம் ரூ. 142.59 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்கள், மடங்கள் (Temples, monasteries) மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள கர்நாடக அரசின் சத்திரங்களின் வளர்ச்சிக்கு எங்கள் அரசு மிகப்பெரிய அளவிலான மானியத்தை வழங்கியுள்ளது. மேலும், ஏராளமான மக்கள் வருகை தரும் மாநிலத்திற்கு வெளியே உள்ள புகழ்பெற்ற மத யாத்திரை ஸ்தலங்களில் யாத்ரீகர்களின் வசதிக்காக கர்நாடக சத்திரங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு சிறப்பு முன்னுரிமை அளித்துள்ளது. ஒரு ஆண்டிற்குள், மாநிலத்தை நாட்டின் முக்கிய ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான தெளிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அறநிலையத் துறையின் வரலாற்றில் ஒரு பெரிய வளர்ச்சிக்கான‌ மைல்கல் நடப்பட்டுள்ளது. காசி யாத்திரை உள்ளிட்ட அனைத்து வகையான புதிய திட்டங்களுக்கும் முதல்வர் சிறப்பான‌ ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

முதல்வ‌ர் பசவராஜ் பொம்மையின் (Chief Minister Basavaraj Bommai) தலைமையிலான அரசு, மாநிலத்தில் உள்ள சமய மையங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளை ஒப்பிடும் போது, இம்முறை அனைத்து சமூகத்தினரின் மத உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிக மானியம் வழங்கி முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, நல்ல பணிகளுக்கு முதல்வர் ஊக்கம் அளித்து வருகிறார். மேலும் மானியங்கள் வழங்கி துறையின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் முதல்வருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.