World’s dirtiest man: உலகின் மிக அழுக்கு மனிதர் 94 வயதில் காலமானார்

Iran : அமோவ் ஹாஜி என்று அன்புடன் அழைக்கப்படும் இந்த அழுக்கு மனிதர், தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக இர்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான்: World’s dirtiest man : அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் இருந்ததற்காக உலகின் மிக அழுக்கு மனிதர் என்ற சாதனையை படைத்த ஈரான் துறவி ஒருவர் தனது 94வது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அமோவ் ஹாஜி என்று அன்புடன் அழைக்கப்படும் அழுக்கு மனிதர், தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த அறுபது ஆண்டுகளாக ஹாஜி தண்ணீர் அல்லது சோப்பு பயன் படுத்தவில்லை (For sixty years Haji did not use water or soap) என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனது 94வது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அமாவ் ஹாஜி ஒரு இளைஞனாக உணர்ச்சிவசப்பட்டபோது, ​​​​தன் உடலைத் தண்ணீர் படக்கூடாது என்று முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. 2014 இல் அமோவ் ஹாஜி பற்றி ஒரு ஊடகச் செய்தி வந்தது. தூய்மையாக இருந்தால் நோய் வரும் என்று அமோவ் ஹாஜி நம்பினார். அமோவ் ஹாஜி ஒரே நேரத்தில் பல சிகரெட்டுகளை புகைக்கும் புகைப்படங்கள் வைரலானது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, இங்குள்ள கிராமவாசிகள் அமோவ் ஹாஜியை முதல் முறையாக குளிக்க சம்மதிக்க வைத்தனர். அமோவ் ஹாஜியின் மரணம் அடைந்ததையடுத்து (After the death of Amov Haji), இந்தியர் ஒருவர் உலகின் மிக அழுக்கான‌ நபர் என்ற இடத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஆம்..! 2009 ஆம் ஆண்டில், புனித நகரமான வாரணாசியின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கைலாஷ் கலாவ் சிங், தேசம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க 30 ஆண்டுகளுக்கும் மேலாக ளிக்கவில்லை. தினமும் மாலையில் கிராம மக்கள் கூடும் போது அவர் நெருப்பு மூட்டுகிறார். கஞ்சா புகைத்து ஒற்றைக் காலில் நின்று சிவனை வேண்டி நிற்கிறார்.