UP Heartbreaking incident: ரத்த வெள்ளத்தில் ஒரு சிறுமியின் புலம்பல்: அங்கிருந்தவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

உத்தரபிரதேச மாநிலம் கனாஜ் நகரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு பின்னால் 13 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சிறுமியின் தலை உட்பட உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தன. அரைகுறையாக கண்விழித்த சிறுமி உதவிக்காக அலறிக் கொண்டிருந்தார், ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

உத்தரபிரதேசம்: UP Heartbreaking incident: உ.பி.யில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: யாருக்காவது விபத்து.. மக்கள் உதவி கேட்டாலும் கண்டு கொள்வதில்லை.. சிலர் நின்று வீடியோ எடுப்பது.. இதெல்லாம் நம் நாட்டில் புதிதல்ல.. இன்னொரு மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மக்களின் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்குகிறது.

உத்தரபிரதேச மாநிலம் கனாஜ் நகரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு (Guest house in Kanaj)பின்னால் 13 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சிறுமியின் தலை உட்பட உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தன. அரைகுறையாக கண்விழித்த சிறுமி உதவிக்காக அலறிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக, கையில் மொபைல் போனுடன் அந்த பெண்ணை வீடியோ எடுத்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறார். சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்காமல், மக்கள் நின்று வீடியோ எடுத்து இருப்பது மனிதாபிமானமற்ற காட்சி.

சிறுமியைச் சுற்றி ஏழு அல்லது எட்டு ஆண்கள் கூடி இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காவல்துறையை அழைக்குமாறு அறிவுறுத்தினார். இன்னொருவர் என்னிடம் போலீஸ் எண் இருக்கிறது என்கிறார். இவ்வளவு நடந்தாலும் அவர்கள் யாரும் அந்த சிறுமியிடம் கருணை காட்டவில்லை. இறுதியாக உள்ளூர் போலீஸ் அவுட்போஸ்ட் இன்சார்ஜ் மனோஜ் பாண்டே (Local police outpost in-charge Manoj Pandey) வந்து சிறுமியை தனது கைகளில் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு குன்வர் அனுபம் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர், இப்போதைக்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது என்று குர்சஹாய்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் மனோஜ் பாண்டே (Kursahaiganj police station in-charge Manoj Pandey) கூறினார்.

சம்பவம் நடந்த விருந்தினர் மாளிகை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுமி அடையாளம் தெரியாத நபருடன் பேசுவது போன்ற காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில், சிறுமியை குடும்பத்தினர் தேடி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது (The video is going viral on social media). இப்படிப்பட்ட நிலையிலும் சிறுமியிடம் கருணை காட்டாமல் வீடியோ எடுக்கும் நபர்களுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.