Twitter Down: ட்விட்டர் சேவை திடீர் நிறுத்தம்

Twitter users have been severely affected due to the sudden shutdown of the service today. ட்விட்டர் சேவை இன்று திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பயனர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதற்குப்பின், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் சிஎப்ஓ உள்ளிட்ட பல அதிகாரிகளை உடனடியாக நீக்கி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களை ட்விட்டர் பணிநீக்கம் செய்தது. இந்த பணிநீக்கம் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த மார்க்கெட்டிங், கம்யூனிகேஷன் மற்றும் பிற துறையை சேர்ந்தவர்களையும் ட்விட்டர் பணிநீக்கம் செய்தது.

இதனைத்தொடர்ந்து சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு (Blue Badge) கட்டணம் வசூலிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை அதன் சிஇஓ எலன்மஸ்க் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிடையே பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இதனையடுத்து இந்த கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ட்விட்டர் நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் 310 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. குறிப்பாக நடிகர், நடிகைகள் எப்போதுமே ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருவது வழக்கம். பயனர்களும் முக்கிய சமூகவலைதளமாக ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்களும், அரசு துறை முக்கிய அதிகாரிகள், அலுவலகங்கள் என பலரும் மக்களுக்கு தகவலை தெரிவிக்கவும் ட்விட்டரை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், இன்று சுமார் 7 மணி அளவில் திடீரென ட்விட்டர் தனது சேவை நிறுத்தியது. ட்விட்டரின் இணையதளத்தை உள்நுழைய முயற்சிக்கும்போது

Nothing to see here

Looks like this page doesn’t exist.

Here’s a picture of a poodle sitting in a chair for your trouble.

Looking for this?

என இணைய பக்கத்தில் தோன்றியது.

இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் பயனர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ட்விட்டர் செயல்படத்தொடங்கியது.