One Rupee Old Note: ரூ.1க்கு வந்த ஜாக்பாட்.. நீங்க வைத்துள்ளீர்களா?

சென்னை: Old one rupee notes can earn lakhs in online market now going viral. பழைய ஒரு ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் மார்க்கெட்டில் பல லட்சம் சம்பாதிக்கலாம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய ரூபாய் நாணயங்களில் 50 பைசா வரை தற்போது புழக்கம் இல்லாமல் இருந்து வருகிறது. இதுதவிர ரூபாய் நோட்டுக்களில் ரூ.5க்கே தற்போது புழக்கம் இல்லாமல் உள்ளது. பணப்மதிப்பிழப்பின்போது பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வங்கிகளில் செலுத்தி, புதிய ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை மக்கள் பெற்று வந்தனர். இந்த பண மதிப்பிழப்பு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது ரூ.500 நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில், ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு அதிக தேவை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பழைய நோட்டுகளை வாங்கவும், விற்கவும் பலர் ஆன்லைன் மூலம் கோரி வருகின்றனர்.

அதன்படி மிகவும் அரிதான ரூ.1 நோட்டுகளின் தேவை தற்பேது ஆன்லைனில் இருந்து வருகிறது.

ரூ.1 நோட்டு எப்படி இருக்க வேண்டும்?

கடந்த 1957ம் ஆண்டு கவர்னர் எச்.எம்.படேல் கையெழுத்துடன், வரிசை எண் 786 அல்லது 123456 இலக்கங்கள் அதில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். அதன்படி இந்த நோட்டை ஆன்லைனில் விற்பனை செய்து நீங்கள் லட்சக் கணக்கில் ஜாக்பாட்டாக அள்ளலாம்.

இந்த ரூ.1 நோட்டை விற்பனை செய்ய Ebay, CoinBazaar மற்றும் Quikr ஆகியவற்றில் முதலில் பதிவு செய்து, அதன்பின் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நோட்டை விரும்புபவர்கள் உங்களை நேரடியாக தொடர்புகொள்வார்கள்.

இந்த செய்தி தற்போது ஊடகங்களின் மூலம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.