England Queen Elizabeth II :இன்று இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு

லண்டன்: Today is the funeral of England Queen Elizabeth II : இங்கிலாந்து மகாராணி இரண்டாம்எலிசபெத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 தலைவர்கள் லண்டனுக்கு வந்துள்ளனர்.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் ( 96 ) (Queen Elizabeth II) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8 ஆம் தேதி காலமானார் . அவரது உடல் லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது . கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக் கான மக்கள் நீண்ட வரிசையில், சுமார் 17 மணி நேரம் வரை கடும் குளிரிலும் காத்திருந்து மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . மகாராணியின் எட்டு பேரக் குழந்தைகளும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி யின் அருகேயே இருந்து வருகின்றனர் . மகாராணியின் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது (government holiday has been announced). இறுதிச்சடங்கு தொலைக்காட்சிகளிலும், பொது இடங்களில் அகண்ட திரைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது . அந்நாடு முழுவதும் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் திங்கள்கிழமை பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . புதிய அரசர் சார்லஸின் மனைவி விடியோ செய்தியில், ‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலக அரங்கில் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனிச் சிறப்புடன் செயல்பட்டார் . அவரது புன்னகையை எப்போதும் நினைவில் கொண்டிருப்பேன் ‘ எனத் தெரிவித்தார். மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வெஸ்ட்மின்டெரிலிருந்து வெஸ்ட் மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

பின்னர், விண்ட்ஸருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரின் கணவர் இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே அடக்கம் செய்யப்படும். மகாராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், இந்தியக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (US President Joe Biden, his wife Jill Biden, Indian President Draupadi Murmu) உள்ளிட்ட‌ உலக நாடுகளைச் சேர்ந்த 500 தலைவர்கள் லண்டனுக்கு வருகை புரிந்துள்ளனர் . இறுதிச் சடங்கில் பொதுமக்கள் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . இதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து 250 கூடுதல் ரயில்கள் லண்டனுக்கு இயக்கப்பட்டு வருகின்றன‌. இறுதிச் சடங்கின்போது ஒலிகளினால் தொந்தரவு ஏற்படாத வகையில் , ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை புரியும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .