O.Paneer Selvam : ஃப்ளூ காய்ச்சல் தாக்க‌ம் குறையும் வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: Schools should be closed in Tamil Nadu until the flu subsides: ஃப்ளூ காய்ச்சல் தாக்க‌ம் குறையும் வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கை: தமிழகத்தில் கரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ள‌ நிலையில், ஃப்ளூ ‘ வகை காய்ச்சல் பரவி வருவதாகவும் (‘Flu’ type fever is spreading), குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிக‌மாக பரவி வருவ‌தாகவும் செய்திகள் வந்துள்ளன . பொதுவாக, சளி இருமலுடன் கூடிய ஃப்ளூ காய்ச்சல் பள்ளி சிறுவர்களிடையே அதிக அளவில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு குறையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோ னையின் பேரில் , புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது (Puducherry, students studying from class 1 to class 8 have been given a holiday). தமிழகத்தைப் பொருத்தவரை காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வரவேண் டாம் என்று அரசு தரப்பில் வேண்டு கோள் விடுக்கப்பட்டாலும் தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃப்ளூ காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வாப்படும் வரை சிறிது காலத்துக்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை (Holiday for primary schools) அளித்து, தேர்வை தள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஃப்ளூயன்சா குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 – ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும் .

அவர்களுக்கு கற்றல் தடைபடாமல் இருக்க ஆன்லைன் மூலம்பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். 10 முதல் 12 – ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரசு தேர்வுகள் இருப்பதால் அவர்களுக்கு உரிய வழிகாட்டுத்த‌லின் படியும், பாதுகாப்புடன் வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும் (10th to 12th class students should attend the classes with due guidance and safety as there are government exams) என தெரிவித்துள்ளனர். அண்மையில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருவதால், 10 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்தக் காய்ச்சல் குழந்தைகளையும் சிறுவர்களையும் அதிக அளவில் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.