Sri Lanka’s new president : இலங்கை நாட்டின் புதிய அதிபர் இன்று தேர்வு

கொழும்பு: Sri Lanka’s new president will be elected today : இலங்கை நாட்டின் புதிய அதிபர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார்.

இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகை இட்டனர். இதனைத் தொடர்ந்து அதிபராக பதவி வகித்த கோத்தபய ராஜபட்சே(Gotabaya Rajapatse) நாட்டை விட்டு தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற பிறகு அவர் அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தற்போது இடைக்கால அதிபராக இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே (Ranil Wickramasinghe) நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அந்நாட்டின் புதிய அதிபர் தேர்வு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

அதிபர் போட்டியில் அந்நாட்டின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமகிங்கே, எம்.பிக்கள் டல்லஸ் அழகப் பெருமாள், அனுராகுமாரா (Azhagap Perumal, Anurakumara) ஆகியோர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் (Indian Embassy), இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தது போல திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கொழும்பில் உல்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.